tamilnadu

img

மாநில பாஜக ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டோம்... அசாம் கணபரிஷத் எச்சரிக்கை

புதுதில்லி:
குடியுரிமை திருத்தச்சட்டத்தை, நாடாளுமன்றத்தில் ஆதரித்த அசாம் கணபரிஷத் கட்சி, மக்களின் போராட்டம் காரணமாக தனது முந்தைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து தவறு இழைத்து விட்டதாக கூறியுள்ள அந்தக் கட்சி உச்சநீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. திருத்தப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய நாங்கள் சட்ட வழியை மேற்கொள்வோம். ஏனெனில் அசாமின் பழங்குடி மக்கள் தங்கள் அடையாளம் மொழி அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடும் பயப்படுகிறார்கள் என்று அந்த கட்சி கூறியுள்ளது. இதனிடையே, “இந்த சட்டத் திருத்தத்தை, மத்திய பாஜக அரசு திரும்பப் பெறாவிட்டால், அசாமில் தங்கள் ஆதரவுடன் இருக்கும் மாநில பாஜக ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டோம்” என்று அசாம் கணபரிஷத் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரபுல்ல குமார் மகந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.