tamilnadu

img

சமூகவலைத்தளங்களில் ‘உயர்’சாதியினர் ஆதிக்கம்..?

புதுதில்லி:
கடந்த 2014, 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் உட்பட பல்வேறு தேர்தல்களின் போது, முகநூல், வாட்ஸ்-அப், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இயங்கும் 24 ஆயிரத்து 236 வாக்காளர்களிடம் அபிவிருத்தி சங்கங்களின் ஆய்வு மையம் (சிஎஸ்டிஎஸ்) ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் உயர்சாதி வாக்காளர்களிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, அதிக ஆதரவு இருப்பது கண்டறியப்பட்டது. 
இது ஆச்சரியமான விஷயம் அல்ல என்பது, ஒருபுறமிருந்தாலும், தலித் மற்றும் பழங்குடியினரை விட உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் இரண்டு மடங்கு அதிகமாக சமூக வலைதளத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் உயர் சாதியினர்தான், சமூக வலைதளங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இரண்டாவது இடத்தில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். 15 சதவிகிதம் அளவுக்கு உயர்சாதியினரும், 8 சதவிகித அளவிற்கு தலித்துக்களும், 7 சதவிகிதம் பழங்குடிகளும், 9 சதவிகிதம் ஒபிசி பிரிவினரும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
நாட்டில் 75 சதவிகித பழங்குடியினருக்கும், 71 சதவிகித தலித்துகளுக்கும் சமூக வலைதளங்கள் குறித்தே சுத்தமாக தெரியவில்லை என்றும், இதுவே உயர்சாதியினரை எடுத்துக் கொண்டால், 54 சதவிகிதம் பேருக்குத்தான் சமூக வலைதளம் பற்றி தெரியவில்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.