tamilnadu

img

ரூ.500 கூட இல்லாதவர்களிடம் ரூ.1996 கோடி பறிப்பு!

புதுதில்லி:
வங்கிக் கணக்குகளில், குறைந்தபட்ச இருப்புத்தொகையைக் கூட பராமரிக்க முடியாதவர்களிடமிருந்து, வங்கிகள் சுமார் ரூ. ஆயிரத்து 996 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன.குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்கப்படாத வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கடந்த 2012-ஆம் ஆண்டு வரை பின்பற்றி வந்தது. இடையே சற்று நிறுத்தி வைத்தாலும், 2017 ஏப்ரல் 1 முதல் வழக்கம்போல வசூலைதுவங்கியது. இதில் அபராதத் தொகை அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து அதை 2017 அக்டோபர் 1 முதல் குறைத்துக் கொண்டது.தேபோல ஏனைய வங்கிகளும், தனது வாடிக்கையாளர்களுக்கு, ரூ. 500, ரூ. 1000, ரூ. 3000. ரூ. 5000 என குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்ணயம் செய்துள்ளன. அதனை பராமரிக்க முடியாதவர்களிடம் அபராதமும் வசூலித்து வருகின்றன.இதன்படி கடந்த 2016-17 நிதியாண்டில் ரூ.790 கோடியே 22 லட்சம், 2017-18 நிதியாண்டில் ரூ. 3 ஆயிரத்து 368 கோடியே 42 லட்சம் என்று அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2018-19 நிதியாண்டில், அதாவது 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் இறுதிவரை 18 பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ. ஆயிரத்து 996 கோடியே 46 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.