tamilnadu

img

நாடு முழுவதும் விலைவாசி கடும் உயர்வு.... நகரங்களை விட கிராமப்புற மக்கள் அதிக அளவில் பாதிப்பு

புதுதில்லி:
இந்தியாவில், கொரோனா தொற்று அபாயம், தொழில் முடக்கம், வேலையிழப்பு ஆகிய பிரச்சனைகளுக்கு இடையே விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக உணவுப் பொருட் களின் விலை பலமடங்கு உயர்ந் துள்ளது.2020 ஜூலை மாதத்திற்கான நுகர்வோர் விலைப் பணவீக்கம் (Consumer Price Inflation - CPI Inflation) மற்றும் நுகர்வோர் உணவு விலைப் பணவீக்கம் (Consumer Food Price Index) தொடர்பான புள்ளி விவரங்களை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்டஅமலாக்க அமைச்சகம் வெளியிட் டுள்ளது. அதில், கடந்த ஜூன்மாதத்தைக் காட்டிலும் ஜூலை மாதத்தில் விலைவாசி கடுமையாகஉயர்ந்திருப்பது தெரியவந்துள் ளது.இதன்படி, இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 6.23 சதவிகிதமாக இருந்த நுகர்வோர் விலைப் பணவீக்கம், 2020 ஜூலையில், இந்தியாவின் நகர்ப்புறங்களில் 6.84 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 7.04சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.

இதேபோல 2020 ஜூன் மாதம் 8.72 சதவிகிதமாக இருந்த நுகர் வோர் உணவு விலைப் பணவீக்கம் ஜூலை 2020-க்கான நுகர்வோர் உணவுப் பணவீக்கம் ஜூலையில் 9.62 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவின் நகர்ப்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் உணவு விலைப் பணவீக்கம் 9.05 சதவிகிதமாக இருக்கும் நிலையில், அதுவே கிராமப்புறங்களில் 9.89 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியில் துறை அமைச் சக அறிக்கை கூறுகிறது.மீன் இறைச்சி 18.81 சதவிகிதம், பருப்பு வகைகள் 15.92 சதவிகிதம், மசாலா பொருட்கள் 13.27 சதவிகிதம், எண்ணெய் மற்றும் கொழுப்புகள் 12.41 சதவிகிதம், காய்கறிகள் 11.29 சதவிகிதம், முட்டை 8.79 சதவிகிதம், தானியங்கள் 6.96 சதவிகிதம், பால் 6.60 சதவிகிதம் என விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

சர்க்கரை, எரிபொருள் மற்றும் பழங்களின் விலையும், முறையே 3.60 சதவிகிதம், 2.80 சதவிகிதம், 0.13 சதவிகிதம் என்று உயர்வைச் சந்தித்துள்ளது.நாடு முழுமைக்குமான நுகர் வோர் பணவீக்கம்- விலைவாசி உயர்வு, தமிழகத்திலும் எதிரொலித்துள்ளது. இன்னும் சொன்னால், நாடு முழுமைக்குமான சராசரியை விட தமிழகத்தில் விலைவாசி அதிகம் என்று புள்ளியல் துறை அமைச்சகம் புள்ளிவிவரம் கூறியுள்ளது.2020 ஜூலையில், நாடு தழுவிய நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index Inflation) 6.93 சதவிகிதமாக இருக்கும் நிலையில், தமிழகத்திலோ அது 7.07 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.கிராமம் - நகரம் ஒப்பீட்டிலும், தமிழகத்தின் நகர்ப்புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 6.96சதவிகிதம் என்றால் அதைக்காட்டிலும் அதிகமாக தமிழக கிராம புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 7.24 சதவிகிதமாக உள்ளது.