tamilnadu

img

மனித மூலதனக் குறியீட்டில் இந்தியாவுக்கு 116வது இடம்... உலக வங்கி வெளியிட்ட 174 நாடுகளின் பட்டியல்

புதுதில்லி:
உலக வங்கி வெளியிட் டுள்ள ‘மனித மூலதனக் குறியீடு’ (Human Capital Index) பட்டியலில், இந்தியா 116-ஆவது இடத்தில் வந்துள்ளது.குழந்தைகளின் கல்வியறிவு, அவர்களின் ஆரோக்கியம் போன்றவைகளின் அடிப்படையில், மனித மூலதன குறியீட்டுப் பட்டியலை உலக வங்கி(World Bank) வெளியிட்டு வருகிறது.

இதில், 2020-ஆம் ஆண்டிற் கான 174 நாடுகளைக் கொண்டபட்டியலை, உலக வங்கி தற் போது வெளியிட்டுள்ளது. இதில்,  0.49 புள்ளிகளைப் பெற்று இந் தியா 116-ஆவது இடத்தில் வந்துள்ளது. 2019-ஐ விட, இந்தாண்டுமனித மூலதனக் குறியீட்டில் இந்தியா 5 புள்ளிகள் உயர்ந்திருந்தாலும், தரவரிசையில் ஓரிடம் கீழிறங்கியுள்ளது. 2018-ஆம்ஆண்டில் இந்தியா 115-ஆவதுஇடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.“கொரோனா பாதிப்புக்கு முன், குறைந்த வருவாய் உள்ளநாடுகளில் கூட, படித்த மற்றும்ஆரோக்கியமான குழந்தைகளின் சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால், கொரோனாவால் இந்த வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளது. 

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஆரோக்கியத்தில் மேம்பாடு, குழந்தைகளின் வாழ்நாள்விகிதம் ஆகியவற்றில் கொரோனாபரவல் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது” என்று உலக வங்கி கூறியுள்ளது.மேலும், “பொருளாதாரத் தாக்கம், குறிப்பாக, பெண்களையும், சாதாரண குடும்பங்களையும் பெரிதும் பாதித்துள்ளது. ஏராளமானோர் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 100 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.