tamilnadu

img

முஸ்லிம் இளைஞர்களின் வீட்டிற்கு செல்ல மறுப்பு... ஆறுதல் தெரிவிப்பதில் கூட பாஜக அமைச்சர் பாகுபாடு

பிஜ்னோர்:
உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது 2 முஸ்லிம் இளைஞர்கள் கடந்த வெள்ளியன்று சுட்டுக் கொல்லப்பட்ட னர். இதேபோன்று முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், காயம்பட்ட ஓம் ராஜ் சைனி என்பவரை, உத்தரப்பிர தேச மாநில பாஜக அமைச்சர் கபில் தேவ் அகர்வால், பிஜ்னோரில் உள்ள அவரின் வீட்டிற்கே சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஆனால், போராட்டத்தில் கொல்லப்பட்ட சுலைமான் (20), அனஸ் (25) ஆகிய 2 முஸ்லிம் இளைஞர்கள் வீட்டிற்குச் செல்வதை அமைச்சர் தவிர்த்துள்ளார். இவ்வளவுக்கும் சைனியின் வீடு இருக்கும் பகுதி யில்தான், சுலைமான், அனஸின் வீடுகளும் இருக்கின்றன.முன்னதாக பிஜ்னோருக்கு, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியும் சென்றார். அவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சுலைமான், அனஸ் ஆகிய முஸ்லிம் இளைஞர்களின் வீடுகளுக்கு மட்டுமன்றி, காயம்பட்டவரான ஓம் ராஜ் சைனியையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால், மாநில அமைச்சரான கபில் தேவ் அகர்வால், இந்து - முஸ்லிம்என பாகுபாடு பார்த்து, வீடுகளுக்குச் சென்றது கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதுபற்றி செய்தியாள ர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, “நான் ஏன் கலவரக்காரர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும்?” எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரான சுலைமான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரைத்தான் அமைச்சர் அகர்வால், ‘கலவரக்காரர்’ என்று பழி போட்டுள்ளார்.