புதுதில்லி:
ரயில்வே பயணிகள் கிரிமினல் புகார்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ரயில்வே பயணிகள் கிரிமினல் புகார்களை பதிவு செய்யவும், அந்த புகார்களுக்கு ரயில்வே போலீஸார் தீர்வு காணும் வகையிலும் இந்திய ரயில்வே புதிய இணையதளம், சகயாத்ரி (Sahyatri ) என்ற செல்போன் செயலி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய இணையதள முகவரி www.railways.delhipolice.gov.in ஆகும். இந்த இரண்டு தளங்களிலும் நாடு முழுவதும் உள்ள கிரிமினல்கள், அவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அடையாளம் தெரியாத சடலம், காணாமல் போன நபர்கள், தேடப்படும் கிரிமினல்கள், தலைமறைவு குற்றவாளிகள், பிற சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் ஆகியவற்றை இணையதளம், செயலி மூலம் அதிகாரிகள் பகிர்ந்து கொள்ள முடியும்.சகயாத்ரி செயலி மூலம், அருகிலுள்ள ரயில்நிலையத்தையும், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட விவரங்களையும் ரயில் பயணிகள் பெற முடியும். க்யு.ஆர். கோட்ஸை வாசிக்கவும், ஸ்கேன் செய்யவும் முடியும்.அவசர காலத்தில் செயலியில் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளவும் முடியும். இந்த செயலியை, ஆன்டிராய்ட், ஐ.ஓ.எஸ். (iOS ) இயங்குதள செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய முடியும்.ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ரயில்வே இணையதளம், ரயில்மதத் செயலி ஆகியவற்றில் பயணிகள் குறைகளை தெரிவிக்கலாம். ஆனால் புதியஇணையதளம், செயலியில் புகார்களை பதிவு செய்யலாம்.