tamilnadu

img

கொரோனா வைரஸை டிராக் செய்யும் செயலி அறிமுகம்

மதுரை:
தமிழ்நாட்டில் 234 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. ஆறு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளும் வசதிகளை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மத்திய அரசு, மக்களுக்கு வழங்கி வருகிறது. முன்னதாக எனது அரசு (MyGov) என்ற ஆப் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை வழங்கி வந்தது. தற்போது கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது.

"ஆரோக்கிய சேது" Aarogya Setu  என்ற  செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செல்போனில் நாம் இருக்கும் இடத்தை  காட்டும்.  ப்ளூடூத்தை இயக்கி  இந்தச் செயலியை திறந்தால், நாம் இருக்கும் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது உள்ளார்களா என்பதைக் காட்டும்.  கொரோனா தொற்று உள்ளவரிடமிருந்து ஆறு அடி தூரத்திற்குள் இருந்தால், 'அதிக ஆபத்து' என எச்சரிக்கும்.