புதுதில்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மோடி அரசு, மக்கள் நலனைப் பற்றி அக்கறைப்படாத அரசாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதாவது:“கொரோனா பாதிப்பு காலத்தில் மக்கள் நலனுக்காகவே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், அந்த சிந்தனைக்கு நேர் எதிரான நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். பிஎம் கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் இருக்கின்றன. வெளிப்படைத் தன்மை இல்லை. ரகசியம் எப்போதும் கெட்ட விஷயங்களுக்கான வழியாகும்.
இதன்மூலம் மக்கள் நலனை நினைக்காமல் வாழ்ந்தவர் பிரதமர்மோடி என்று வரலாறு நினைவுபடுத்தும். சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடையான ‘பிபிஇ கிட்’ குறித்த கூட கவலைப்படாதவராக மோடி இருக்கிறார். ஏழை மக்கள்,தொழிற்சாலைகள், நிறுவனங்களுக் கான பொருளாதார நிதித்தொகுப்பை வழங்காமல் மத்திய அரசு தாமதிக்கிறது. ஊரடங்குகளை அறிவிக்கும் முன்எந்தவிதமான திட்டமிடலிலும் மத்திய அரசு இறங்கவில்லை.’’