tamilnadu

img

செல்வந்தர்கள் மேலும் செல்வம் குவிக்க ஏழைகளிடமிருந்து அனைத்தையும் பறிக்கும் பட்ஜெட்

மக்களவையில் பி.ஆர்.நடராஜன் பேச்சு

புதுதில்லி, பிப்.13- மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டா னது பொருளாதார மந்த நிலையை யோ, வேலையில்லா திண்டாட்டத்தை யோ கவனத்தில் கொள்ளாத, அதனை  தீர்க்க முயலாத ஒரு தோல்வியுற்ற பட்ஜெட் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழு தலை வர் பி.ஆர்.நடராஜன் சாடினார். மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் அவர் பேசுகை யில், உலகில் எந்த இடத்திலிருக்கும் ஒப்பிடத் தகுந்த தனியார் நிறுவனங் களைக் காட்டிலும், மிகச் சிறந்த பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) உட்பட, பொதுத்துறை நிறுவனங்களில், அரசுக்கு இருக்கும் பங்குகளை விற்க  முடிவெடுத்திருப்பது ஒரு ஆபத்தான நகர்வாகும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியதாவது:

பொருளாதாரத்தை முடக்கும் நெருக்கடிகளை எப்படி சந்திப்பது என்பது பற்றிய எந்த தடயமும்  அரசிடம் இல்லை  என்பதையே நிதி அமைச்ச ரின்  பட்ஜெட் உரை வெளிப்படுத்து கிறது. தலையாய பிரச்சனைகளுக்கு, தீர்வு காணும் ஒத்திசைவான கொள்கை வழிகாட்டுதல்களுக்கு பதிலாக, தடுமாறுகின்ற ஒரு பொருளா தாரத்தின் யதார்த்தங்களை மறைக்கும், இரண்டரை மணி நேர தன்னுரையாகவே இந்த உரை இருந்தது. தரவை கையாள, தொலை வான, நேர்மையற்ற முயற்சிகள் இருந்த போதிலும், பொருளாதார நெருக்கடி பட்ஜெட் எண்ணிக்கையில் காட்டப்பட்டது. அரசு, அதிகரித்து வரும் கடுமையான வேலையின்மை, உழைக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் சுய தொழில் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் ஆகி யோரின் வாழ்நிலை ஆகிய பிரச்சனை களை  சரி செய்ய முயலாமல், கார்ப்பரேட்டுகள், செல்வந்தர்கள் ஆகியோருக்கு நிவாரணங்கள் அளிப்பதிலேயே ஆர்வம் காட்டுவ தாக உள்ளது. இத்தகைய செயலே,  பொருளாதார மந்தத்திற்கு மூலகாரண மாகும். தேவையான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் செலவினங்களை அதிகரித்தல், வரு வாய் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில்  வளங்களை திரட்டுதல் போன்றவற்றிற்கான திட்டங்கள் எதையும் கூறாமல், நிதிப் பற்றாக் குறையை குறைக்க மேலும் அரசின் செலவினங்களை வெட்டுவது, தேசத்தின் சொத்துக்களை பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு விற்பது போன்ற வற்றை மட்டுமே அரசு தனது பொறுப்பாக கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைளின் சுமை அனைத்தும் உழைக்கும் மக்களாலேயே உணரப்படும்.

திருத்தப்பட்ட மதிப்பீடுகள் சரியல்ல

இந்த பட்ஜெட்டில், திருத்தப்பட்ட மதிப்பீட்டுப் புள்ளிவிவரங்கள் காட்டுவது என்னவென்றால், 2018-19ஆம் ஆண்டில் வருவாய் வசூல், பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது என்பதே. இப்போதும் கூட, அவை பற்றாக்குறை யின் அளவைக் குறைத்து மதிப்பிடு கின்றன. மத்திய வரி வருவாயின், திருத்தப்பட்ட மதிப்பீட்டு விவரங்கள், 2019-20 ஏப்ரல்-டிசம்பர் காலத்திற்குரிய, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி யால் தகவல் அளிக்கப்பட்ட உண்மை யான வசூலோடு பொருந்தாததாக உள்ளது. மத்திய வரிகளிலிருந்து பெறப்பட்ட மொத்த வருவாயில் 1.5 லட்சம் கோடிகளுக்கு நெருக்கமான தொரு பற்றாக்குறையையே ஒரு யதார்த்தமான திருத்தப்பட்ட மதிப்பீடு காட்டியிருக்கும். இதுபோல், உண்மையான வரு வாய் நிலையை மறைக்கின்ற செய லானது, திருத்தப்பட்ட மதிப்பீட்டு விப ரங்களை வெளிப்படுத்தாமல் இருப்ப தோடு இணைக்கப்பட்டு, உண்மை யான செலவுக் குறைப்பு, வருவாய் குறைவு ஏற்படுகையில், நிதிப் பற்றாக்குறையை சந்திக்கும் பொருட்டு, இறுதியாக நிர்வகிக்கப் படும். இந்த நடவடிக்கை சென்ற  ஆண்டு செய்ததையே மீண்டும் செய் திருப்பதாகும். 2020-21 நிதி ஆண்டிற் கான திட்டக் கணிப்புகள், வருவாய் கணிப்புகளை உயர்த்திக்காட்டி, செலவுகளை ஒதுக்கீடு செய்கையில், அதனை ஈடு கட்ட முடியாத, அதே பாகுபாட்டை பிரதிபலிக்கிறது. இந்தக் கையாளல்களுக்குப் பிறகும், 2018-19  ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடு, பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ.2.98 லட்சம் கோடிகள் குறைவானதே. இதில், 1.53 லட்சம் கோடி ரூபாய் மத்திய வரிகளில் தங்கள் பங்காக மாநிலங்கள் எடுத்துக் கொள்ளும். ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை தொடர்பான பரிமாற்றங்கள், இழப்பீட்டு செஸ் வசூலுக்கு வரவு வைக்கப்படும். என மாநில அரசு களும் அச்சுறுத்தப்படுகின்றன. மத்திய  அரசின் செலவுகளின், திருத்தப்பட்ட மதிப்பீடு, பல இனங்களில் பெருத்த குறைப்பை காட்டுகின்றன. 

 2019-20 ஆண்டிற்கான மத்திய பிரிவு திட்டங்களுக்கான செலவுகள் 11% குறைக்கப்பட்டுள்ளன. மத்திய  அரசால் நிதியளிக்கப்படும் திட்டங் களுக்கான செலவுகள் - அதாவது உணவு மானியம், விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள், வட கிழக்கு மாநிலங்களின் முன்னேற்றம், சமூக நலம், எரிசக்தி போன்றவற்றிற்கான செலவுகள் 4.5% குறைக்கப்பட்டுள்ளன.  2020-21 ஆண்டிற்கு முன்மொழி யப்பட்ட, குறைப்புகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்திற்கு ரூ.71000 கோடியிலிருந்து ரூ.61500 கோடியாக குறைப்பதும்,  உர மானியத்தைக் குறைப்பதும் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன. தலைமைத் திட்டங்களான ஆயுஷ்மான் பாரத், ஸ்வாச் பாரத் மற்றும் கிஸான் திட்டங்களுக்குள் கூட பெரிய அளவிலான குறைப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. பட்டியலினத்தவர், பழங்குடியினர் நலனுக்கான ஒதுக்கீடுகள், குறைக்கப் பட்டுள்ளன. பாலின சம நிலைக்கான பட்ஜெட்டும், இதேபோல, தேக்கநிலையைக் காட்டுகிறது.  வரி பற்றிய முன்மொழிவுகளில், கார்ப்பரேட்டு களுக்கும் செல்வந்தர்களுக்கும் நிதி அமைச்சர், மேலும் சலுகைகளை அறிவித்துள்ளார். 

செல்வந்தர்களின் செல்வக் குவிப்பு

இந்தியாவின் 1 சதவிகித செல்வந்தர்கள்,  கீழே உள்ள 70 சதவிகித  அதாவது 100 கோடி மக்களிடமுள்ள செல்வத்தை விட  4 மடங்கிற்கு  மேலான  செல்வத்தை வைத்திருக்கும் நிலையில் இது நடக்கிறது. 2019-20 பட்ஜெட் மதிப்பீட்டை ஒப்பிடுகையில், திருத்தப்பட்ட மதிப்பீட்டில், ரூ.1.55 லட்சம் கோடிகள், ஏற்கனவே, கார்ப்பரேட் வரியில் கொடுக்கப்பட்ட சலுகைகளின் விளை வாக பற்றாக்குறை ஆகிவிட்டது.  2019-20ல் உயர்த்தப்பட்ட வரி வருவாய் மீதுள்ள 12 சதவிகித  வளர்ச்சி, 2020-21க்கு  கணிக்கப்பட்டுள்ளது. தெளிவாக இதன் பொருள் என்னவென்றால், தனியார்மய மாக்கல் மற்றும் பங்கு விற்பனையில் மூலமாக வளங்களை திரட்டுதல் ஆகும். ரூ.65000 கோடியிலிருந்து  (திருத்தப்பட்ட மதிப்பீடு 2019-20) ரூ.210000 கோடியாக 2020-21ல் உயர்ந்துள்ளது. இது, ரூ.62000 கோடி, உண்மை மூலதன செலவுகளின் அதிகரிப்பை நடுநிலையாக்குதலை விட அதிகமாக இருக்கும்.  2019-20ல் ரூ.184220 கோடியாக இருந்த உணவு மானியம், நடப்பு பட்ஜெட்டில், ரூ.108688 கோடியாக மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது.

உணவு மானியம் கடும் வெட்டு

இந்தியாவில் உணவு மானியம் என்று வெறுமனே  இந்திய உணவுக் கழகம்  தனது கணக்குகளை சமநிலைப்படுத்த மட்டுமே. இந்திய உணவுக் கழகம், தற்போது மிக  அதிக அளவு இருப்பினை சுமந்து கொண்டி ருக்கிறது என்ற உண்மையைப் பொறுத்த வரை, சென்ற வருடத்தை விட உணவு மானியம் அதிகமாக உயர்ந்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக, 40 சதவிகித  குறைந்திருக்கிறது. இதற்கு நிச்சய மாக ஒரு வெளிப்படையான காரணம்  உள்ளது. தற்போது அரசு உணவுக்கழ கத்தை வங்கிகளிடமிருந்து கடன்பெறும் படி செய்கிறது. இது உணவு தானியங் களை வாங்குவதற்காக மட்டுமல்ல, அரசிட மிருந்து உணவுக்கழகத்திற்கு கிடைக்க  வேண்டிய தொகையை ஈடு கட்டுவதற்காகவும் கூட. இப்படி செய்வதன் விளைவு அரசு சந்தைக்கு செல்லாமல், மறைமுகமாக வங்கிகளிடமிருந்து கடனை பெற்றுக் கொள்வதாகும். இதன்மூலம், அரசு,  நிதிப் பற்றாக்குறையை குறை வானதாகக் காட்டிக்கொள்ளலாம். ஆனால், இந்தத் திருத்தங்கள், சில சமயம்  கழித்து, எப்போதும் திருப்பித் தாக்கும். தற்போதைய நிகழ்வில் இது இரண்டு காரணங்களால் ஏற்படும். முதலாவதாக, உணவுக்கழகத்திற்கு தொடர்ந்து நிலுவைகள் கூடிக்கொண்டே செல்வதால், அதன் வங்கிக்கடனும் கூடிக்கொண்டு செல்லும். இது இந்த அமைப்பிற்கு அழுத்தத்தை தரும். இரண்டாவதாக, அரசு,  சந்தைக்கு சென்று, கடனை திரட்டி,  உணவுக்கழகத்திற்கு  நிதி  அளிப்பதாக இருப்பின், என்ன வட்டிக்கு கடன் எழுப்பி இருக்குமோ, அதை  விட வங்கிகள்  உணவுக்கழகத்திற்கு விதிக்கும் வட்டி வீதம் அதிகமாக இருப்ப தால், மொத்த பொது நிதியும் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. 

எழுகிற சந்தேகம் என்னவென்றால், ஒரு நேரம் வரும் அப்போது அரசு, நிர்வகிக்க மிக அதிக செலவாகிறது என்று கூறி, மொத்த பொது விநியோகத் திட்டத்தையே எளிதாக முடித்து வைக்க ஆரம்பிக்கும் காலம் வரும் என்பதே! மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பெயரளவிற்கு 10 சதவிகித  உயர்ந்துள்ளதாக கொண்டாலும், சென்ற வருட பட்ஜெட் புள்ளி விவரங்களுக்கு மேல், 2020-21க்கு ஆன செலவுகள், 9.2 சதவிகிதம் மட்டுமே. கடந்த சில ஆண்டு  அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால், நிதிப் பற்றாக்குறையை பராமரிக்க, இந்த தொகையை செலவு செய்தல் கூட சாத்தியமில்லை. எனவே, மத்திய பட்ஜெட், பொருளாதார மந்த  நிலையை எதிர்கொள்வதற்கு பதிலாக, நிலவுகின்ற பிரச்சனைகளை தீவிர மாக்குவதோடு, பரவலாக வியாபித்திருக் கும் பொருளாதாரத் துயரங்களை ஆழப்படுத்தும்.  இவ்வாறு அவர் பேசினார்.