புதுதில்லி:
மக்கள், ‘ஓலா’, ‘உபேர்’ போன்ற வாடகைக் கார் சேவையை அதிகம் பயன்படுத்துவதே வாகன விற்பனை வீழ்ச்சிக்குக் காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டுபிடித்துள்ளார்.வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை, 2018 ஆகஸ்டில் 23 லட்சத்து 82 ஆயிரத்து 436 வாகனங் கள் என்று இருந்தது. இது தற்போது 2019 ஆகஸ்ட்டில் 18 லட்சத்து 21 ஆயிரத்து 490 ஆக குறைந்துள்ளது. ஓராண்டுகாலத்தில் 23.55 சதவிகிதம் விற்பனைச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதற்கு ஆட்டோமொபைல் துறைக்கு மோடி அரசு விதித்துவரும் 28 சதவிகித ஜிஎஸ்டி வரியே காரணம் என்று கூறப்படுகிறது. இதனை 18 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்றும்கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல உடனடியாக மின்சார வாகனத்திற்கு மாறும் கொள்கையை மோடி அரசு கைவிட வேண்டும் என்றும்வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஆனால், இவையெல்லாம் பிரச்சனைகளே அல்ல என்பது போல, “ஆட்டோமொபைல் துறை தற்போதுபி.எஸ்.6. (BS VI) ரக வாகனங்களாலும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் மனநிலையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்று மத்திய நிர்மலா சீதாராமன் புதிய கதைகூறியுள்ளார்.அதாவது, “புதிய தலைமுறையினர் தற்போது புதிய வாகனத்தைவாங்குவதை விட, ‘ஓலா’ மற்றும்‘உபேர்’ போன்ற நிறுவனங்களின் வாடகைக்கார் சேவைகளை பயன்படுத்துவதையே விரும்புகிறார்கள்; அத்துடன் மெட்ரோ ரயில் சேவைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்; இதுவோ வாகன விற்பனை வீழ்ச்சிக்குக் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.