districts

img

ஓலா, உபேர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிப்பதை கைவிடுக! ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 20 - திருச்சி மாவட்டத்தில் கல்பனா ஆட்டோ நிலைய 36 ஆம் ஆண்டு பேரவை மற்றும் நிர்வாகிகள் தேர்தல் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கல்பனா ஆட்டோ  நிலைய அலுவலகத்தில் புதன்கிழமை நடை பெற்றது.  பேரவைக்கு நிலைய செயல் தலைவர் அப்பாஸ் தலைமை வகித்தார். தேர்தல் பணிக் குழு கணேசமூர்த்தி வரவேற்றார். அஞ்சலி  தீர்மானத்தை கௌரவ தலைவர் ராஜேந்திரன்  வாசித்தார். ஆட்டோ சங்க மாவட்ட துணைச்  செயலாளர் பக்ருதீன் பாபு துவக்கவுரை ஆற்றினார். வரவு-செலவு அறிக்கையை நிலைய பொருளாளர் சிலம்பு செல்வன் சமர்ப்பித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் திருச்சி மாந கரம் முழுவதும் தோண்டப்பட்டுள்ள சாலை களை உடனே சீரமைக்க வேண்டும். நலவாரிய பணப் பலன்களை உடனே வழங்க  வேண்டும். உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். நியாயமான மீட்டர் கட்ட ணத்தை நிர்ணயிக்காமல் ஓலா, உபேர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை மறைமுகமாக ஊக்குவிப்பதை ஒன்றிய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.  மருத்துவ காப்பீட்டு வசதி செய்து தர  வேண்டும். அரசு அனுமதியின்றியும், சட்ட விரோதமாகவும், பொதுமக்களுக்கு பாது காப்பு இல்லாமலும் செயல்படும் ரேபிட்டோ போன்ற இருசக்கர வாகன வாடகை சவாரி  பயணத்தை உடனே தடை செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய தலைவராக ஜி.ராஜேந்திரன், செய லாளராக ஏ.அப்துல்ஷெரீப், பொருளாள ராக வி.மாரிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். முன்னதாக நிலைய தலைவரும், மாவட்ட சங்க துணைத் தலைவரும், ஜங்சன் பகுதி கட்சி கிளை உறுப்பினராக பதவி வகித்து மறைந்த ஆட்டோ ஓட்டுநர் தோழர் ராஜ் குடும்ப நிதி ரூ. 65 ஆயிரத்தை ஆட்டோ சங்கம் சார்பில் அவரது மகன் சதீஷி டம் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் வழங்கினார். நிலைய செயலா ளர் அப்துல் ஷெரீப் நன்றி கூறினார்.