புதுதில்லி:
காங்கிரஸ் தன்னை சரிவர மதிக்கவில்லை என்பதாலேயே பாஜக-வுக்குசென்றதாக, ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருந்தார். இந்நிலையில், சிந்தியாவின் முடிவு குறித்து, அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய்யின் மகனும் அசாம் எம்.பி.யுமான கவ்ரவ் கோகாய் பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜகவில் தனக்கு அதிக மரியாதை கிடைக்கும் என்று சிந் தியா நினைத்தால் அவர் பெரிய தவறிழைத்து விட்டார் என்றே பொருள், காங்கிரஸில் அவருக்கு அளித்த மரியாதையில் 10 சதவிகிதத்தைக் கூடபாஜக அவருக்கு அளிக் காது என்று கூறியுள்ளார்.