12 ஆயிரத்திற்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்ய டிசிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அதன் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை, அதாவது சுமார் 12,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை நிதியாண்டுக்குள் எடுக்கப்படும் என்றும், இது கடினமான முடிவு என்றும் ஆனால் வேறு வழியில்லை இதனால் இது நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் TCS தலைமை நிர்வாக அதிகாரி கே.கீர்த்திவாசன் தெரிவித்துள்ளார்.