tamilnadu

img

கபீல் கான் மீது இன்னும் குற்றம் மிச்சம் இருக்கிறதாம்!

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயிரிந்தனர். இந்த விவகாரத்தில், உத்தரப்பிரதேச பாஜக அரசு, தன்மீதான குற்றத்தை மறைக்க, அரசு மருத்துவர் கபீல் கான் மீது பழிபோட்டு அவரைக் கைது செய்தது. ஜாமீன் கூட வழங்காமல், கபீல் கானை 9 மாதங்கள் சிறையில் அடைத்தது.ஆனால், மருத்துவர் கபீல் கான் மீதான புகார்கள் ஆதாரமற்றவை என்று, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹிமான்ஷூகுமார் தலைமையிலான விசாரணைக்குழு, ஏப்ரல் மாதம் அறிக்கை அளித்தது. 5 மாதமாக இதன்மீது முடிவெடுக்காத உத்தரப்பிரதேச பாஜக அரசு, வேறு வழியில்லாமல் கடந்த வாரம் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு,கபீல் கானை குற்றமற்றவராக அறிவித்தது.இந்நிலையில், கபீல் கான் மீது 7 குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும், அவற்றில் 4 குற்றச்சாட்டுகளில் மட்டுமே அவர் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் உத்தரப்பிரதேச மாநில மருத்துவக் கல்விக்கான அதிகாரி ரஜனீஷ் துபே கூறியுள்ளார்.கபீல் கான் ஒரு அரசு மருத்துவர் என்ற நிலையில், அவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே சொந்தமாக கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலம் துவங்கி தற்போது வரை, உத்தரப்பிரதேச அரசு குறித்து பல தவறான தகவல்களை கூறி வருகிறார். இவையெல்லாம் விதிமுறைகளை மீறும் செயலாகும் என்று ரஜனீஷ் குறிப்பிட்டுள்ளார்.