states

img

‘ஊபர்’ ‘ஓலா’ போல் அரசு ஆன்லைன் டாக்ஸி ஆட்டோ... கேரளத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி தொடக்கம்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில், ஊபர், ஓலா போன்று வணிக வாகன இணையவழி சேவையை கேரள அரசு நவம்பர் 1 ஆம்தேதி தொடங்க உள்ளது. தொழிலாளர் அமைச்சர் வி.சிவன்குட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொழிலாளர் ஆணையம் ஆன்லைன் டாக்ஸி ஆட்டோ அமைப்பை ஒழுங்குபடுத்து கிறது. இச்சேவை கேரள மோட்டார் தொழிலாளர் நல நிதி வாரியத்தால் போக்குவரத்து, ஐடி, காவல் மற்றும் சட்டத் துறைகளுடன் இணைந்து நடத்தப்படும்.

கேரள மோட்டார் தொழிலாளர் நலநிதி வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் ஆன்லைன் டாக்ஸி ஆட்டோ அமைப்புக்கான நிபந்தனைகளை வாரியம் தயாரிக்கும். அமைப்பின் செயல்பாட்டிற்கு கேரள மோட்டார் தொழிலாளர் நலநிதி வாரியத்தின் பணம் செலவழிக் கப்படாது. இருப்பினும், விளம்பரத் திற்கு தேவையான தொகையை கேரள மோட்டார் தொழிலாளர் நல நிதி வாரியம் முன்கூட்டியே செலுத்தும். திட்டத்தை செயல்படுத்தும் போது அரசுவழங்கும் தொகையிலிருந்து இந்தத் தொகை ஈடாக்கப்படும்.தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக திட்டத்தில் சேரும் வாகனங்கள் ஜிபிஎஸ் நிறுவ தேவையில்லை. அதற்கு பதிலாக ஸ்மார்ட்போனை ஜிபிஎஸ் வழிசெலுத்தலுக்கு பயன்படுத்தலாம். முன்னோடித் திட்டம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும். இதற்கு முன் சோதனை ஓட்டம் நடத்தப்படும். தொழிலாளர் ஆணையர், கேரள மோட்டார் தொழிலாளர் நல நிதி வாரியம் மற்றும் ஐடிஐ லிமிடெட் ஆகியவை ஆன்லைன் டாக்ஸி ஆட்டோ அமைப்பை திறம்பட செயல் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.