சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நிறை புத்த ரிசி பூஜை ஜூலை 30ஆம் தேதி நடக்கிறது. இதை யொட்டி கோவில் நடையை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட் டம் ரத்தன்புரி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஷமா (வயது 28). திருமண வரதட்சணை யாக ரூ. 5 லட்சம் கேட்டு, மணமகன் குடும்பத்தின ரானால் அடித்துக் கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் நடந்த இரு வெவ்வேறு என்கவுன்டரில் 7 நக்சல் களை பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றனர்.
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்த லில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மூணாறில் கனமழை கார ணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச் சரிவால் சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாற்று வழியில் வாகனங்கள் செல்ல அனுமதி அளித்துள்ளனர். இரவு நேரத் தில் மலைப்பகுதியாக வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆந்திர மாநில உளவு துறை டிஎஸ்பிக்கள் 2பேர் பரிதாபமாக பலியாகினர்.