மான்சா கோவிலில் கூட்ட நெரிசல் 8 பேர் உயிரிழப்பு
பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் மான்சா தேவி கோவில் உள் ளது. இந்த கோவிலில் ஞாயிறன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விடுமுறை நாள் என்பதால் சிறப்பு பூஜை யில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக் தர்கள் கோவிலில் குவிந்தனர். முன்னெச் சரிக்கை நடவடிக்கை இல்லாததால் காலை 9 மணி அளவில் கோவிலுக்குச் செல்லும் முன்படிக்கட்டுகளில் கடுமை யான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை உயரும் தகவலறிந்த காவல்துறை, மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஹரித்வார் மாவட்ட ஆட்சியர் மயூர் தீட்சித் தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற் பட்டுள்ளது. ஆட்சியை கலைக்குமா பாஜக? எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என பாஜக கொக்கரிப்பது வழக்கம். ஆனால் தங்கள் கட்சி ஆளும் கூட்ட நெரிசல் ஏற் பட்டால் பாஜக கோமாவுக்கு சென்றது போல அமைதியாக உறங்கிவிடும். தற்போது பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ள னர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, பாஜக அரசு பதவி வேண்டும் அல்லது பிரதமர் மோடி, அமித் ஷா தலையிட்டு உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள், நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலி எண்ணிக்கை உறுதியாக இல்லை மான்சா கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஞாயிறன்று மாலை 6 மணி நில வரப்படி 8 பேர் பலியாகியதாக செய்திகள் வெளியாகியது. இது மருத்துவமனை தரப்பு வெளியிட்ட செய்திகள் ஆகும். ஆனால் மாநில அரசு நிர்வாகம் 6 பேர் மட்டுமே உயிழந்ததாக கூறியது. இத னால் பலி எண்ணிக்கை உறுதியாக அறி விக்கக்கூட உத்தரகண்ட் பாஜக அரசு திணறி வருகிறதா? இல்லை வழக்கம் போல மறைக்கிறதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.