நியூயார்க்:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்தகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக, இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.தற்போது இந்தப் போராட்டம்அமெரிக்காவுக்கும் விரிவடைந்துள்ளது. இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, ஹூஸ்டன், அட்லாண்டா,சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட 30 நகரங்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தியத் தூதரகங்கள் முன்பு ஒன்று திரண்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சிஏஏ-வுக்கு எதிரான பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.‘இந்திய - அமெரிக்க முஸ்லிம் கவுன்சில்’, ‘மனித உரிமைகளுக்கான இந்துக்கள்’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் இணைந்து நடத்தியஇந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் ‘மகசேசே’ விருது பெற்ற சந்தீப்பாண்டே கலந்து கொண்டு இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.