tamilnadu

img

‘இந்தியாவே பேசு!’ முழக்கம் டிரெண்ட் ஆக்கிய காங்கிரசார்....

புதுதில்லி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்பதை அம்பலப்படுத்தும் ஆன்லைன் பிரச்சார இயக்கத்திற்கு வியாழனன்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.புலம்பெயர்ந்தோர் பலர் போக்குவரத்து வசதி இல்லாததால் இன்னும் கூட வீட்டிற்கு நடந்தே செல்லவேண்டிய அவல நிலை தொடர்கிறது அல்லது பெரிய நகரங்களில் சிக்கி ஷ்ராமிக் ரயிலில் இருக்கை பெற முயற்சிக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், வேலையிழந்த இளை
ஞர்கள், வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்த குடும்பங்கள், தொழில் முடக்கத்தை சந்தித்து வரும் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோரின் நேர்காணல்களை காங்கிரஸ் கட்சியினர் சமூகவலைதளங்களில் வெளியிடலாம், குறும்படம் அல்லது செய்தியை வீடியோவாக பதிவேற்றலாம் என்று தனது கட்சியினரை காங்கிரஸ் கேட்டுக்கொண்டிருந்தது.

அதன்படி, “மோடி அரசின் அறியாமைக்கு எதிராக பேச வேண்டிய நேரம் இது,அக்கறையின்மைக்கு எதிராக பேசவேண்டிய நேரம் இது, பாஜக அரசாங்கத்தின்கொடுமைக்கு எதிராக பேச வேண்டிய நேரம் இது” என்ற முழக்கங்களை ‘இந்தியாவே பேசு’ (#SpeakUpIndia) எனும் ஹேஷ்டே க்கைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கியுள்ளனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர், 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்த பிரச்சாரத்தின் மூலம் தங்கள் குறைகளை சமூக ஊடக தளங்களில் பதிவிட்டுள்ளனர்.