புதுதில்லி:
புதிய விமானங்களை வாங்குவதற்கு இந்தியா தீவிரம் காட்டி வரும் நிலையில், தரமற்ற வெடிகுண்டுகள், ஆயுதங்கள் காரணமாக, அதிகப்
படியாக விபத்துகள் ஏற்படுவதாக இந்திய ராணுவம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.இந்திய ராணுவத்திற்கு, மத்திய அரசின், ஆர்ட்னன்ஸ்பேக்டரி போர்டு அமைப்பு தான் ஆயுதங்களை விநியோகம் செய்கிறது. 41 ஆயுதத்தொழிற்சாலைகள் இந்த அமைப்பின்கீழ் இயங்குகின்றன.
ஆனால், தரமற்ற ஆயுதங்கள், தளவாடங்கள் விநியோகத்தால், சமீபகாலமாக, விபத்துகள் அதிகரித்து வருவதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு ராணுவம் புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக 15 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை, பாதுகாப்புத்துறையிடம் ராணுவம் வழங்கியுள்ளது. பெரும்பாலான விபத்துக் கள் 105 எம்எண் இந்திய துப்பாக்கிகள், 105 எம்எம் லைட் பீல்ட் துப்பாக்கிகள், 130 எம்எம் எம்ஏ1 மீடியம் துப்பாக்கிகள், 40 எம்எம் எல்-70 ஏர் டிபென்ஸ் துப்பாக்கிகள், டி-72 மற்றும் டி-90 வகை துப்பாக்கி குண்டுகளால் நடப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சில நேரங்களில் 155 எம்எம் போபர்ஸ் துப்பாக்கிகளிலும் விபத்துகள் நடந்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற விபத்துகளுக்குப் பிறகு, 40 எம்எம் துப்பாக்கிகளைக் கொண்டும், எல்-70 துப்பாக்கிகளைக் கொண்டும் பயிற்சிபெறுவதே நிறுத்தி விட்டதாகவும், இதனால், எல்-70 தோட்டாக்கள் வீணாகி விட்டன; மோசமான தரம்தான் இதற் கெல்லாம் காரணம் என்றும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, ராணுவத் தின் குற்றச்சாட்டை ஆர்ட்னன்ஸ் பேக்டரி போர்டு அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். “அதிகப்படியான தரச் சோதனைகளுக்கு பிறகுதான், வெடி பொருட்களை ராணுவத்திற்கு அளிக்கிறோம். மொத்தமாக வெடி பொருட்களை சேமித்துவைத்தல், தவறாக கையாளுதல் போன்றவற்றால் வேண்டுமானால் விபத்துக்கள் நடந்திருக்கலாமே தவிர, தரத்தில் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், ஆர்ட்னன்ஸ் பேக்டரி போர்டு சார்பில் இதுவரை 7 கமிட்டிகள் அமைக்கப் பட்டு, ராணுவத் தளவாட தரம் பற்றி ஆய்வு நடந்துள்ளது. ஆனால், ஆயுதக் கிடங்கில் உள்ள ஆயுதங்களின் நிலைஎன்ன என்பது பற்றி, விசாரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.