world

img

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

ரஷ்யா 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 72 ட்ரோன்கள் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி இலக்குகளைத் தாக்கின. இது ரஷியாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும். இதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமை இரவு 537 ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலே உச்சமாக இருந்த து என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீவ் நகரம் இந்தத் தாக்குதலில் முக்கிய இலக்காக இருந்தது. எட்டு மணி நேரத்துக்கும் மேலாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நகரின் சியாடோஷின்ஸ்கி பகுதியில் இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கீவ் நகர ராணுவ நிர்வாகத் தலைவர் தெரிவித்தார்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. கடந்த 2022 பிப்ரவரியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் போர் நீடிக்கிறது.

நேட்டோ கூட்டமைப்பின் மாநாட்டில் ரஷ்யாவை பலவீனப்படுத்த உக்ரனை முழுவீச்சில் பயன்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் திட்டமிட்டிருந்த நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிப்படுத்தியிருக்கிறது.