இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: நீக்கமும், இணைப்பும்
கோவை, பிப்.23- கோவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில், வரைவு வாக்காளர் பட்டியலை விட 1.24 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு பிறகு, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் திங்களன்று வெளியிடப் பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டார். அதன்படி, மாவட் டத்தில் மொத்தம் 26 லட்சத்து 96 ஆயிரத்து 813 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 13 லட்சத்து 889 ஆண் வாக்காளர்களும், 13 லட் சத்து 95 ஆயிரத்து 396 பெண் வாக்கா ளர்கள் மற்றும் 528 மாற்றுப் பாலினத் தவர்களும் உள்ளனர். கடந்த டிசம் பர் மாதம் வெளியிடப்பட்ட பட்டிய லில், 5 லட்சத்து 28 ஆயிரத்து 385 பேர் நீக்கப்பட்டனர். இதன்பின் புதி தாக 1 லட்சத்து 64 ஆயிரத்து 518 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், பல் வேறு காரணங்களால் 42 ஆயி ரத்து 313 பேர் நீக்கம் செய்யப்பட்ட னர். நாமக்கல் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி யில் 2,20,554 வாக்காளர்களும், சேந் தமங்கலம் (தனி பழங்குடியினர்) தொகுதியில் 2,27,327 வாக்கா ளர்களும், நாமக்கல் தொகுதியில் 2,35,351 வாக்காளர்களும், பர மத்திவேலூர் தொகுதியில் 2,03,567 வாக்காளர்களும், திருச்செங் கோடு தொகுதியில் 2,06,928 வாக் காளர்களும், குமாரபாளையம் தொகுதியில் 2,17,224 வாக்காளர்க ளும் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 6,35,299, பெண் வாக்காளர்கள் 6,75,452, மாற்றுப் பாலினத்தவர்கள் 200 என மொத்தம் 13,10,951 வாக் காளர்கள் உள்ளனர். நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் 2,61,317 ஆண் வாக்காளர்களும், 2,85,791 பெண் வாக்காளர்களும், 25 மாற்று பாலினத்தவர்களும் என மொத்தம் 5,47,133 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்திலுள்ள உதகை சட்ட மன்ற தொகுதியில் மொத்தம் 1,87,425 வாக்காளர்களும், கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 1,83,88 வாக்காளர்களும், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 1,75,820 வாக்காளர்களும் உள்ள னர். இப்பட்டியலை மாவட்ட ஆட்சி யரும், தேர்தல் அலுவலருமான லட் சுமி பவ்யா தண்ணீரு, அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் வாக்கா ளர் இறுதிப் பட்டியலை அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சிய ரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ரெ.சதீஸ் வெளியிட்டார். அதன்படி, மாவட்டத்திலுள்ள பாலக்கோடு, பென்னாகரம், தரும புரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதி களில் மொத்தம் 6 லட்சத்து 24 ஆயிரத்து 647 ஆண் வாக்காளர்க ளும், 6 லட்சத்து 15 ஆயிரத்து 311 பெண் வாக்காளர்களும், 150 மாற் றுப் பாலினத்தை சேர்ந்த வாக்கா ளர்களும் என மொத்தம் 12 லட்சத்து 40 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த டிச.19 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத் தின் மூலம் 47 ஆயிரத்து 352 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ள னர். இதேபோன்று, 11 ஆயிரத்து 161 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட் டுள்ளனர். ஈரோடு ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதிப் பட்டியலை ஈரோடு ஆட்சியர் ச.கந்தசாமி வெளி யிட்டார். அதில், மாவட்டத்திலுள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானி சாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதி களில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 38 ஆயிரத்து 466, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து ஆயி ரத்து 574, மாற்றுப் பாலினத்தவர் கள் 182 பேர் என மொத்தம் 17 லட் சத்து 40 ஆயிரத்து 222 பேர் உள்ள னர். கடந்த டிச.19 ஆம் தேதி வெளி யிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டி யல்படி மொத்தம் 16 லட்சத்து 71 ஆயிரத்து 760 பேர் இருந்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு முகாம் களில் பெறப்பட்ட படிவங்கள் சரி பார்க்கப்பட்டு, மொத்தம் 68 ஆயி ரத்து 462 பேர் வாக்காளர் பட்டிய லில் சேர்க்கப்பட்டுள்ளனர். சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளி யிட்டார். கெங்கவல்லியில் 2,16,794, ஆத்தூரில் 2,26, 481, ஏற்காடு (தனி) தொகுதியில் 2,70,529, ஓமலூரில் 2,91,866, மேட்டூரில் 2,53,445 பேரும், எடப்பாடியில் 2,74,054, சங்ககிரியில் 2,58,678, சேலம் மேற்கு தொகுதி யில் 2,55,320, சேலம் வடக்கு தொகுதியில் 2,36,688, சேலம் தெற்கு தொகுதியில் 2,24,097, வீர பாண்டியில் 2,48,478 பேரும் என மொத்தம் 27,55,830 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13,70,962, பெண் வாக்காளர்கள் 13,84,548, மாற்றுப் பாலினத்தவர்கள் 320 உள்ளனர்.
