world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அரச குடும்ப வாரிசுரிமை ஆண்ட்ரூவை நீக்க திட்டம்

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவர சருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சரை அரச வாரிசுரிமை வரிசையில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தைக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. வர்த்தக தூதராக இருந்த போது அரசின்  முக்கியத் தரவுகளை கொடும் குற்றவாளியான எப்ஸ்டீனுக்கு பகிர்ந்தது தொடர்பான  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண்டரூ  விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அவரை வாரிசுரிமைப் பட்டிய லில் இருந்து நீக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது.

பசிபிக்கடல் பகுதியில் 3 பேரை கொலை செய்த அமெரிக்கா

 கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் சென்ற படகு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்தப் படகில் இருந்த மூன்று நபர்கள் கொலை யாகியுள்ளனர். படகில் பயணித்தவர்கள் போதைப்பொருள் கடத்தியதற் கான ஆதாரத்தை ராணுவம் வெளியிடவில்லை. கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில்  போதைப்பொருள் கடத்தியதாக கூறி இதுவரை 43 முறை அமெரிக்கா குண்டு வீசியுள்ளது. இந்த தாக்குதலால் அப்பாவி மீனவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் : 11 பேர் படுகொலை

 கிழக்கு லெபனானில் ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் மீது இஸ்ரேல் தொடர் வான் வழித்தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல்களில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூன்று தளபதிகள் பொதுமக்கள் என 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ள தாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகளுள் ஒருவரான ஹுசைன் முகமது யாகியிஇத்தாக்குதலில் கொலை செய்யப்பட்டதை  ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஹிட்லர் பிறந்த வீடு காவல் நிலையமாக மாறுகிறது  

பாசிஸ்ட்  ஹிட்லர் பிறந்த வீட்டை, காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரிய அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. ஜெர்மனி நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள ‘பிரானாவ் அம் இன்’என்ற ஊரில் ஹிட்லர் பிறந்த இல்லம் அமைந்துள்ளது. இந்த இடத்தை நாஜி ஆதரவா ளர்களோ அல்லது தீவிர வலதுசாரி அமைப்பினரோ ஒரு புனிதத் தலமாக மாற்றிவிடக் கூடாது என்பதில் ஆஸ்திரிய அரசு உறுதியாக உள்ளது. எனவே, அந்த இடத்தின் வரலாற்றுத் தாக்கத்தை “முடக்கும்” (Neutralize) நோக்கில்,2016-ஆம்ஆண்டு ஒரு சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு, அந்தஇல்லம் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.