வயது மூப்பால் உயிரிழந்த மூத்த தமிழறிஞர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்(90) மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
மூத்த தமிழறிஞர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள் என தன் வாழ்நாள் முழுவதும் எழுதிக் குவித்தவர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்தவர். பன்னாட்டு தமிழுறவு மன்றம் என்ற அமைப்பை நிறுவி உலகத் தமிழர்களின் உறவுப் பாலமாக திகழ்ந்தவர். தமிழ் மொழி வளர்ச்சிக்காகவே தன்னுடைய வாழ்வை அர்பணித்தவர்.
அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். என தெரிவித்துள்ளார்.
மேலும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்(90) உடலுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.