தில்லி
நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியின் தவுலாகான் பகுதியில் நேற்று இரவு (ஆக., 21) ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் வீதியில் சுற்றி திரிவதாக அப்பகுதி காவலர்களுக்கு தகவல் வந்துள்ளது.
இதனால் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்திய தில்லி போலீசார் ரிட்ஜ் சாலையில் அவரை மறித்து பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த மர்ம நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பினார். கடுமையான போராட்டத்துக்கு இடையே அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் அவரிடம் இருந்து குக்கர் குண்டு உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முதல்கட்ட விசாரணையில் அவர் ஐ.எஸ். தீவிரவாதி என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தாமல் உள்ளது.