புதுதில்லி, ஏப்.16-பாஜக தோல்வி உறுதியாகி விட்டது என்றாலும், குறுக்கு வழியில் ஒருவேளை பாஜக கூட்டணி வெற்றிபெற்று, மோடி மீண்டும் பிரதமராவார் என்றால், பிரதமர் அலுவலகத்தில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள் பலர்,பணி மாற்றம் பெறுவது அல்லது முன் கூட்டியே பதவியை ராஜினாமா செய்வது என்று முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 8 துறைகளின் அதிகாரிகள்தங்களின் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், மோடியின் தோல்வியை, ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச் சகத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள்தான், இந்த அதிர்ச்சித் தகவலை, தங்களின் பெயரை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.பிரதமர் அலுவலகத்தைப் பொறுத்தவரை சுமார் 25 மூத்த அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், நிர்வாக விஷயங்களில் மோடி நடந்து கொள்ளும் விதம், வழக்கமான அரசு நிர்வாக முறைகள் அல்லது கொள்கைகளுக்கு மாறாக,தான் விரும்பியபடிதான் செயல்பட வேண்டும் என அதிகாரிகளை மிரட்டுவது, பிரதமர்மட்டும் அல்லாது சில மத்திய அமைச்சர் சளும் அதிகாரிகளின் முடிவில் குறுக்கிடுவது, குறிப்பாக ஆர்எஸ்எஸ் பேர்வழிகளின் மிதமிஞ்சிய தலையீடு ஆகியவை 25 மூத்த அதிகாரிகளை ரொம்பவே அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.இந்த உயரதிகாரிகள் பலரும் சாதாரணமானவர்கள் அல்ல. இந்தியாவின்உயர்தரமான பல்கலைக்கழகங்கள் அல்லது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயின்றவர்கள். 4 ஆயிரத்து 500 பேர்களுடன் போட்டிபோட்டு, இந்தியஆட்சிப்பணித்துறை அதிகாரியாக (ஐனேயைn ஹனஅinளைவசயவiஎந ளுநசஎiஉந - ஐஹளு)தேர்வு பெற்றவர்கள்.
அப்படிப்பட்ட, திறமையான அதிகாரிகளான தங்களை, அரசு நிர்வாகம் பற்றிகொஞ்சமும் தெரியாத பாஜக பிரமுகர்கள்அடிமைகள் போல நடத்துகிறார்கள் என்றபுழுக்கம் அதிகாரிகளுக்கு நீண்டகாலமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அதன் இறுதிக்கட்டமாகவே, தன்மானத்தை இழந்து இனியும் மோடிக்கு கீழே பணிபுரிய முடியாது என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்திருக்கிறார்களாம்.அதிகாரிகளின் இந்த முடிவு, பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும் தெரியும் என்றுகூறப்படுகிறது. இதனால், கடந்த பிப்ரவரி மாதம் 2 மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ரகசிய கூட்டத்தில், “நம் அதிகாரிகளில் பலருக்கு இன்னும் இடதுசாரித் தாக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். எனினும், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவேண்டாம்; நாம் மீண்டும் வெற்றிபெற் றால்தானே, அதிகாரிகளின் எதிர்ப்பு வெளியே வரும், அது நடந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து சென்றுள்ளார்.