போபால்:
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுமருத்துவமனைகளில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் தங்களுக்கான உதவித்தொகையை 17 சதவிகிதம் உயர்த்த வேண்டும், தங்களுக்கோ தங்களின் குடும்பத்தின ருக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டால் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், அவர்களின் கோரிக்கை யை பரிசீலிக்காமல், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ம.பி. பாஜக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தது. இதனிடையே மருத்துவர்களின் போராட்டத்தை சட்ட விரோதம் என்று கண்டித்த மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம், போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் 24 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. இது ஜூனியர் மருத்துவர்களை மிகுந்த மனவேதனைக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியது. இதையடுத்து, மாநிலத்தின் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஜூனியர் மருத்துவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து, அந்தந்த கல்லூரிகளின் டீனுக்கு கடிதம் அனுப்பி யுள்ள னர். அரசு ஏற்கெனவே அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றாமல் ஏமாற்றியதாலேயே மருத்து வர்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டதாக வும், உயர் நீதிமன்றத்தின் உத்தர வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் ஜூனியர் மருத்துவர் சங்கத்தின் (Junior Doctors Association -MPJDA) தலைவர் டாக்டர் அரவிந்த் மீனா தெரிவித்துள்ளார்.