பனாஜி
கோவாவில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அம்மாநில அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் வேறு கட்சிக்கு தாவி வருவது வாடிக்கையாகி வருகிறது.
இன்று கோவாவில் ஒரு பெரிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. போர்வோரிம் என்ற சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என ராஜிநாமா செய்த காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜினாமா செய்தனர். எனினும் அவர்கள் எந்த கட்சியில் சேரப்போகிறார்கள் என்பதை அறிவிக்கவில்லை.