world

img

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: ரஷ்யா, சீனா கண்டனம்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும்,  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பாக கூறி இஸ்ரேல், ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத் தலைமையகம், மருத்துவமனை உள்ளிட்ட பல கட்டிடங்கள் சேதமாகின.

ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி அமெரிக்காவிடம் சரணடைய வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.

அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது என ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரான் உச்சபட்ச தலைவர் அலி கமேனி உயிருடன் இருக்க முடியாது என்று இஸ்ரேல் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக மத்தியகிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவு வருகிறது. இந்நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.