world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:ரஷ்யா, அமெரிக்காவில் சுனாமி தாக்கம்

மாஸ்கோ,ஜூலை30-  ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக ரஷ்யா, ஜப்பான், அலாஸ்கா, ஹவாய் தீவுக ளையும் சுனாமி தாக்கியது.  இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப் பைன்ஸ், ஹவாய், சிலி, ஈக்வடார், பெரு, பிரெஞ்சு பாலினேசியா, குவாம், கோஸ்டாரிகா உள்ளிட்ட 16 நாடு களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீப கற்பத்தில் சுமார் 119 கிலோமீட்டர் (74 மைல்) தொலைவில் புதன்கிழமை அதிகாலை 8.8 ரிக்டர் என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 4 மீட்டர் (13 அடி) உயரத்தில் சுனாமி அலைகள் ஏற்பட்டன. பல கட்டிடங்கள் சேதமடைந்தன.  ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஹவாய்  உள்ளிட்ட நாடுகளில் சுனாமி ஏற்படுவதற்கான அபாய ஒலி  எழுப்பப்பட்டது. மேலும் லட்சக்கணக் கான மக்கள் கடலோரங்களில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளி யேற்றப்பட்டுள்ளனர்.  ஹவாயின் மவுயி நகரில் உள்ள கஹுலுய் என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4 அடி உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. சுனாமி முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து வணிக துறைமுகங்க ளையும் மூடுவதாக ஹவாய் அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்தது. மேலும் அமெரிக்க கடலோர காவல்படை அனைத்து வணிகக் கப்பல்களையும், ஹவாயின் துறை முகங்களில் இருந்து வெளியேற அறி வுறுத்தியுள்ளது. சுனாமி எச்சரிக்கை நீக்கப்படும் வரை எந்த கப்பலும் துறைமுகத்திற்குள் நுழைய வேண் டாம் என  தடை விதிக்கப்பட்டுள்ளது. சுனாமி அலைகள் தாக்கம் பல மணி நேரம் நீடிக்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் அணு ஆயுதத்தை  நிலை நிறுத்தும் அமெரிக்கா

  ரஷ்யாவை மிரட்டும் வகையில் இங்கிலாந்தில் தனது ஆணு ஆயுதத்தை அமெரிக்கா நிலைநிறுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதத்தை வைத்துள்ளது என அந்நாட்டின் மீது குண்டுகளை வீசிய அமெரிக்கா தற்போது ரஷ்யாவை மிரட்டுவதற்காக அணுகுண்டுகளை கொண்டு செல்வதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

  இஸ்ரேல் ராணுவத்தால்  ஐ.நா ஊழியர்கள் படுகொலை

 2023 அக்டோபர் முதல் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஐ.நா ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா அவையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை  தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் குழப்பமான, ராணுவமயமாக்கப்பட்ட விநியோக மையங்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.