world

img

போர் நிறுத்தம் : கம்போடியா- தாய்லாந்து தளபதிகள் சந்திப்பு

போர் நிறுத்தம் : கம்போடியா- தாய்லாந்து தளபதிகள் சந்திப்பு

நாம்பென்/பாங்காக்,  ஜூலை 30 -  போர் நிறுத்தத்தை செயல்படுத்துவது குறித்து தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.   மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், அமெரிக்கா மற்றும் சீனாவின் தூதர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜூலை  28 திங்களன்று  தாய்லாந்து-கம்போடியா “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்  நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.  மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் தாய்லாந்தின் இடைக்காலப் பிரதமர் பூம்தாம் வெச்சாயச்சாய், கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் ஆகிய இருவரும் நேரடியாக கலந்து கொண்டனர்.   இந்த போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து இரு நாடுகளின் ராணுவத் தளபதி களுக்கு இடையேயான சந்திப்பு செவ்வாய்க் கிழமை நடைபெறும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி இரு நாடுகளின் பிராந்திய ராணுவத் தளபதிகள் செவ்வாய்க்கிழமை யன்று காலை சந்தித்து போர் நிறுத்தத்தை  செயல்படுத்துவது குறித்து விவாதித்துள்ள னர். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்துவது, போர் நிறுத்தத்தை மதிப்பது, மோதல் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்க எண்ணிக்கையை அதி கரிப்பதை நிறுத்தவும் ஒப்புக்கொண்டனர்.  இருநாட்டுக்கும் இடையான தொடர்பு களை மீண்டும் ஏற்படுத்துவதற்கு ஒருவருக் கொருவர் தகவல்களை பரிமாறிக்கொள்ள வும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். தாய்லாந்து-கம்போடியா எல்லையில் நடந்துவரும் எல்லைப் பிரச்சனையால் ஜூலை 24 அன்று ஏற்பட்ட ராணுவ மோதல்களில் இரு தரப்பிலும் மொத்தம் 35க்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர். 2,70,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே மோதல் துவங்கிய பிறகு அமெரிக்காவும் சீனாவும் மலேசியா மூலமாக எடுத்த நடவடிக்கைகள் மூலமாக தற்போது போர் நிறுத்த முடிவு எட்டப்பட்டுள்ளது.  மலேசியாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா மற்றும் அமெரிக்க தூதுவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.