india

img

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா....

அகமதாபாத்:
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி சனிக்கிழமை பிற்பகல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல்நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.பின்னர் காந்திநகரில் அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நான் பிரதமர் தலைமையில், பாஜக தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் கட்சியில் பணியாற்ற எனது விருப்பத்தைத்  தெரிவித்துள்ளேன்’’ என்றார். விஜய் ரூபானி 2016-ஆம் ஆண்டுஆகஸ்ட் 7 ஆம் தேதி மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பாஜகவில் முதல்வர்பதவியைத் துறந்த நான்காவது முதல்வர் இவர்.