மோடி அரசின் பொய்ப் பிரச்சாரங்களை நிராகரித்திடுவோம் : சிபிஎம்
புதுதில்லி, அக். 30- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சிதைக்கும் தீர்மானத்தையும் சட்டத்தை யும் மத்திய அரசு அக்டோபர் 31 (இன்று) முதல் அமலாக்கும் நிலை யில், தங்களின் அரசமைப்புச் சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பறித்ததற்கு எதிராக அம்மாநில மக்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவினை அளித்திடுவோம், மோடி அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை நிராகரித்திடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய அரசாங்கம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக் பகுதி யைத் தனியே பிரிப்பதற்கும், அம்மாநி லத்தை அர்த்தமற்ற வகையில் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்ப தற்கும் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தைத் (அக்டோபர் 31) தேர்ந் தெடுத்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கு வகை செய்த 370ஆவது பிரிவை ரத்து செய்த தற்கும், மாநிலத்தை சிதைத்து யூனியன் பிரதேசங்களாக அதன் அந்தஸ்தைத் தாழ்த்தியதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தன் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறது. மாநில மக்கள் அல்லது மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களைக் கேட்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், முழுமையான மாநில அதிகாரங்களுடன் செயல்பட்டு வந்த ஒரு மாநிலத்தின் அந்தஸ்தைப் பறித்தும், அதனை இரண்டாகப் பிரித்து இருப்பதும் இந்திய ஜனநாயகத்தின் வெட்கக்கேடான தினமாகும். இது அர சமைப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவை அப்பட்டமாக மீறிய செயலாகும். நாட்டின் கூட்டாட்சி அமைப்பு உட்பட அரசமைப்புச்சட்டத்தின் விழுமியங் களை உயர்த்திப் பிடித்திடும் எவரும் இதனைக் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.
காஷ்மீர் சிதைப்பை அதிகாரப்பூர்வ மாக அமலாக்கிட வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தைத் தேர்ந்தெடுத் திருப்பதன் மூலம், அரசாங்கம், உண்மைகளை ஒழித்துக்கட்டி அந்த இடத்தில் தாங்கள் புனைந்த வரலாற்றை திணித்திடும் அமித் ஷாவின் சூத்தி ரத்தைப் பின்பற்றி இருக்கிறது. வல்ல பாய் பட்டேல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உருவாவதற்கான முக்கியமான நபர் களில் ஒருவர் மட்டுமல்ல, 370 ஆவது பிரி வைத் தயாரித்ததிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். 1949 மே 15, 16 தேதிகளில் அவருடைய இல்லத்தில்தான், நேரு மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோருக்கிடையில் இது தொடர்பாக விவாதங்கள் நடை பெற்றன என்பது வல்லபாய் பட்டே லின் நினைவுக் குறிப்புகளி லும் இருக்கின்றன. அதிகாரபூர்வமான முறையில் பதிவும் செய்யப்பட்டிருக் கின்றன. பின்னர், வல்லபாய் பட்டேல், கோபால்சாமி ஐயருடன் இணைந்து வரைவைத் தயார் செய்தார். பின்னர் அது 370ஆவது பிரிவாக மாறியது. இது தொடர்பாக அரசியல் நிர்ணய சபை யிலும் பட்டேல்தான் 370ஆவது பிரிவைக் கொண்டுவந்தார். ஏனெனில் அப்போது நேரு அமெரிக்காவில் இருந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சிதைப்பதற்கான சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இரண்ட ரை மாதங்கள் கழிந்த பின்னரும், அம்மாநில மக்கள் நாட்டின் குடிமக்க ளுக்கான ஜனநாயக உரிமைகள் எதுவும் அளிக்கப்படாமல் மறுக்கப்பட்டி ருக்கின்றனர். பாஜக மற்றும் அதன் அமைப்புகள் தவிர வேறெந்த அரசியல் கட்சி நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. காஷ்மீர் மக்க ளின் குரல் வலுக்கட்டாயமாக நசுக்கப் பட்டிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதான தலைவர் களும் மற்றவர்களும் இன்னமும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக் கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பறிக்கப்பட்டிருப்பது (lockdown and shutdown) தொடர்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தங்களின் அரசமைப்புச்சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை மறுத்ததற்கு எதிராக அம்மாநிலமக்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு தார்மீக ஆதர வினை அளித்திட வேண்டும் என்றும் மோடி அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சா ரங்களை நிராகரித்திட வேண்டும் என்றும் நாட்டுமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது.
(ந.நி.)