கவுகாத்தி
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கொரோனா பதற்றத்துக்கு இடையே வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
இதனால் கல்வி நிறுவனங்களின் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அம்மாநில அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் பரிசோதனை செய்து பரிசோதனை அறிக்கை கையில் இருக்க வேண்டும். நெகடிவ் முடிவுகளை வைத்திருக்கும் ஆசிரியர்கள் மட்டுமே செப்டம்பர் 1-ஆம் தேதி வேலையில் சேர முடியும். ஆசிரியர்களுக்கான கொரோனா பரிசோதனை ஆகஸ்ட் 21 முதல் தொடங்கும் என அசாம் கல்வித்துறை அமைச்சர் ஹிமிந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்