tamilnadu

img

என்ஆர்சி ‘நிராகரிப்பு’ சீட்டு மார்ச் 20 முதல் விநியோகம்... மக்களை வதை முகாமிற்கு அனுப்ப அசாம் அரசு தீவிரம்

புதுதில்லி:
அசாம் மாநிலத்திற்கான, இறுதி தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) கடந்த 2019 ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்டது. அசாமில் மொத்தம் 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 661 பேர் வசித்து வந்த  நிலையில், என்ஆர்சி இறுதிப் பட்டியலில்,3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 4 பேர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றன.

19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர்நீக்கப்பட்டனர். இவர்களில் இந்து மதத்தைச் சேர்ந்த 13 லட்சம் பேரும், இஸ்லாமியர்கள் 6 லட்சம் பேரும் அடக்கம். அதாவது இவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்று மத்திய அரசால் அடை யாளப்படுத்தப்பட்டனர்.இறுதிப்பட்டியலில் இடம் பெறாத வர்கள் ‘நிராகரிப்பு’ சீட்டுகளுடன் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று 60 நாட்கள் காலஅவகாசம் அறிவிக்கப்பட்டது. பின்னர்அது 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டது.

எனினும், என்ஆர்சி பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்கும், ‘நிராகரிப்பு சீட்டு’ வழங்கலில் அரசுத் தரப்பில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிராகரிப்புச் சீட்டு அடிப்படையில்தான், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தீர்ப்பாயங்களிலும், நீதிமன்றங்களிலும் முறையிட முடியும்.இந்நிலையில் என்.ஆர்.சி. பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட 19 லட்சத்துக்கும் அதிகமானவர் களுக்கு மார்ச் 20 முதல் ‘நிராகரிப்பு சீட்டு’ வழங்க என்.ஆர்.சி. ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் அசாம் அரசு தெரி வித்துள்ளது. தற்போது, ஸ்பீக்கிங் ஆர்டரை ஸ்கேன் செய்வது தொடர்பான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 

இந்த பணி முடிந்ததும், மார்ச் 20 முதல் நிராகரிப்பு சீட்டை வெளியிடுவதற்கான திட்டம் உள்ளது என்று அமைச்சர் படோவரி கூறியுள்ளார். என்.ஆர்.சி. புதுப்பித்தல் பணிகளுக்காக மொத்தம் ரூ. ஆயிரத்து 348 கோடியே 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நிராகரிப்புச் சீட்டைப் பெற்றுக் கொண்ட பின், சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் “1971 மார்ச் 24 அன்றோ அல்லதுஅதற்கு முன்னதாகவோ அசாமிற்கு வந்துவிட்டோம்” என்பதை வெளிநாட்டி னர் தீர்ப்பாயங்களிலும் உயர் நீதி மன்றங்களிலும் நிரூபித்தாக வேண்டும். அவ்வாறு நிரூபிக்கத் தவறுபவர்கள், கைது செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் இந்தியக் குடிமகனுக்குரிய உரிமைகள் பறிக்கப்பட்டு, தடுப்பு மையம் என்று கூறப்படும் வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்.