கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டு சந்தேகத்துக்குரிய குடிமக்கள் அல்லது குடியுரிமை பெறாதவர்கள் தடுப்புக்காவல் மையங்கள் எனப்படும் வதை முகாம் களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், அசாம் வதை முகாம்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார்.அதில், கடந்த 3 ஆண்டுகளில், அசாம்மாநில வதை முகாம்களில் அடைக்கப் பட்டவர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.“அசாம் மாநில அரசு அளித்த தகவல்களின்படி பிப்ரவரி 27, 2020-இல் 799 பேர் தடுப்புக் காவல் மையங்களில் உள்ளனர். இதில் 95 பேர் 3 மற்றும் அதற்கு கூடுதலான ஆண்டுகள் முகாமில் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் 26 பேர் உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்” என்று நித்யானந்த் ராய் கூறியுள்ளார்.