tamilnadu

img

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்களுக்கு கொரோனா.... 

திருப்பதி 
நாட்டின் பிரசித்திபெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 14-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்ட்டது. 

கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வும், கொரோனா பரவலுக்கு வாய்ப்பில்லை என திருப்பதி தேவஸ்தானம் அடிக்கடி செய்தி வெளியிட்டது.

ஜூலை மூன்றாவது வாரத்தில் கொரோனா தனது பரவல் ஆட்டத்தை தொடங்கியது. இதுவரை 14 அர்ச்சகர்கள், 140 தேவஸ்தான பணியாளர்கள்  உட்பட மொத்தம் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கோவிலின் முக்கிய ஜீயர்களான சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவரும் திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.