தில்லி
தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை (ஆக., 24) காலை 11 மணியளவில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 20 பேர் கூட்டாக,"காங்கிரஸ் கட்சிக்குள் நிலையற்ற தன்மை நிலவுவதால், முழு நேர தலைவர் நியமிக்க வேண்டும்" என கடிதம் எழுதியுள்ளனர். இதனால் முக்கியமாக காலியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அக்கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி தொடர்ந்து ஓராண்டு காலமாக செயலாற்றி வருகிறார். முக்கியமாக இந்த பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை என்றும், கட்சியில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் தோல்வியால் கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.