tamilnadu

img

உரிமை கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை!

உரிமை கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் வெற்றி

கோயம்புத்தூர், மே 15 - “பொள்ளாச்சி பாலியல் வழக்கில்,  நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற் கிறோம்; இந்த தீர்ப்பின் வெற்றிக்கு அதிமுக உரிமை கொண்டாடத் தகுதி யில்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். தீக்கதிர் கோயம்புத்தூர் பதிப்பு  புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி, கோவை, தண்ணீர் பந்தல் பகுதியில் புதனன்று நடை பெற்றது. இதில் பங்கேற்று பெ. சண்முகம், புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை வரவேற்பதாகக் கூறினார். “வாச்சாத்தி, சிதம்பரம் பாலியல் விவகாரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி தீர்வு கண்டுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், குற்றத்தை மறைக்கவும் அதிமுக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அதிமுக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவினர். மக்கள் போராட்டத்தால் மட்டுமே இவ்வழக்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடவில்லை. இந்தத் தீர்ப்புக்கு அதிமுக உரிமை கோருவது கண்ட னத்திற்கு உரியது” என்றார். “பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர் களுக்கோ அரசு வேலை வழங்க வேண்டும்; இவ்வழக்கிற்காகப் போரா டியவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். ஒன்றிய அரசு வகுப்புவாத அரசியல் செய்வதாகவும், அதற்கு பஹல்காம் தாக்குதல் தான் உதாரணம் என்று விமர்சித்த பெ. சண்முகம், “247 கி.மீ. இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு தீவிரவாதிகள் திரும்பிச் சென்றுள்ளனர். இதற்கு ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  யுத்தத்தை நிறுத்த அறிவிப்பை வெளி யிட்ட போது, இந்தியப் பிரதமராக, டிரம்பை மாற்றிவிட்டார்களா என்று மக்கள் அதிர்ச்சியடைந்தனர். எனவே, இந்த விவகாரத்தில் உண்மையை மக்க ளுக்கு வெளிப்படுத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்துகிறது. நாடே பஹல்காம் தாக்குதலை கண்டு அதிர்ச்சிக்குள்ளான நிலையில், பிரதமர் வெளிநாட்டிலிருந்து திரும்பியும், சம்பவ இடத்திற்குச் செல்லவில்லை. மாறாக அவர் பீகாருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றார். பாஜகவின் நோக்கம் எப்போதும் ஒன்றுதான், அது தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பது மட்டும்தான்” என்றும் பெ. சண்முகம் குற்றம் சாட்டினார். “தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. காலிப்பணியிடங்கள் குறைந்த ஊதியத்தில் நிரப்பப்படுகின்றன. பஞ்சமி நிலங்கள் மீட்கப்படவில்லை” என்று குறிப்பிட்ட பெ. சண்முகம், “மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 11 முதல் 20 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்; பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.