ஐஓபி வங்கியில் 400 பணியிடங்கள்
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 அதிகாரிகள் (LOCAL BANK OFFICERS) பணியிடங்களை நிரப் பவுள்ளனர். இதற்கான அறிவிக்கை வெளியாகியிருக்கிறது. கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் (Any Degree). வயது வரம்பு : 20 முதல் 30 வரை யில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்ச்சி தரப் படும். தேர்வு முறை : முதல் கட்ட தேர்வாக ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெற்றவர் நேர்முகத்தேர்வுக்கு வர வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத் தினர்/மாற்றுத்திறனாளிகள் விண்ணப் பதாரர்கள் : ரூ.175/- கட்டணம் மற்ற விண்ணப்பதாரர்கள் : ரூ.850/- கட்டணம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : மே 31, 2025 விண்ணப்பத்தை நிரப்பவும், கூடுதல் விபரங்களுக்கும் https://www.iob.in/Careers என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.
டிஎன்பிஎஸ்சி மூலம் 330 பணியிடங்கள்
மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 330 பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிக்கை வெளியாகி யுள்ளது. ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணித்தேர்வு (Combined Technical Service Exam) மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். உதவி இயக்குநர், துணை மேலா ளர், துணை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு நடை பெறும் இந்த பணியிட நிரப்புதலுக்கு குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிக பட்ச வயது பொதுப்பிரிவினருக்கு 32 ஆகவும் இருக்கவேண்டும். இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின் படி உச்சபட்ச வயது வரம்பில் தளர்ச்சி இருக்கும். தேர்வு முறை : இந்தப் பணியிடங் களை நிரப்புவதற்கான தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும். தமிழ்மொழித் திறன் தேர்வு மற்றும் எந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ அதற்குரிய பாடங்களில் இருந்து வினாக்கள் இருக்கும். இந்த எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படை யில் பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வுத் தேதிகள் : தமிழ்மொழித் திறன் தேர்வு : 20.07.2025 முதன்மைத் தேர்வு (பாடத்திற்குரி யது) : 20.07.2025 முதல் 23.07.2025 வரையில் எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் கள் விபரம், பணியிடங்களின் பெயர்கள், காலியிடங்களின் எண்ணி க்கை, கல்வித்தகுதி உள்ளிட்டவை குறித்த முழுமையான விபரங்கள் www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன. விண்ணப் பிப்பதற்கான இணைப்பும் அதில் கிடைக்கும். கடைசித் தேதி : இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 11.06.2025 ஆகும்.
எஸ்எஸ்சியின் (SSC) திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை
ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (Staff Selection Commission) திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. மிகக்குறைந்த இடைவெளியில் இந்தத் தேர்வுகள் வரவுள்ளதால், அனைத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து எழுதுவதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. முதல் கட்டத் தேர்வுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வினாத்தாள்கள்தான் இருக்கும். கல்வித்தகுதிகள் மட்டும்தான் வேறுபடும். பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான அனைத்துத் தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.