மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் போராட்டம்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, நடைபெற்ற பேரணியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் அ. குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்