tamilnadu

பொது வேலைநிறுத்தம்  

பொது வேலைநிறுத்தம்  

ஜூலை 9-க்கு ஒத்திவைப்பு புதுதில்லி, மே 15 - மே 20 அன்று திட்டமிடப்பட்டிருந்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம், ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை (மே 15, 2025) மாலை 5 மணிக்கு கூடி ஆலோசனை நடத்தின. அதில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட முடிவை எடுத்தன. நாடு கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் நிலையிலும், இந்திய அரசு தொழி லாளர் விரோத தொகுப்புச் சட்டங்களை அமல்படுத்தவும், வேலை நேரத்தை அதிகரிக்கவும், தொழிற்சங்க உரிமை களை குறைக்கவும் தீவிரமாக முயற்சித்து வருவதற்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்தன.