புதுதில்லி:
2020-ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 5.2 சதவிகிதமாக குறைத்து, ‘எஸ் அண்ட் பி’ குளோபல் நிறுவனம் (S&P Global Ratings) அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தியாவின் வளர்ச்சியை, முன்பு 5.7 சதவிகிதமாக ‘எஸ் அண்ட் பி’ குளோபல் நிறுவனம் கணித்திருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகப் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், முந்தைய கணிப்பிலிருந்து 0.5 புள்ளிகள் குறைத் துள்ளது.
“அமெரிக்கா ஒன்றியம் 2.8 சதவிகிதம், ஐரோப்பிய ஒன்றியம் 4.2 சதவிகிதம் என்ற அளவில் தங்களின் தேவைகளை இந்தியாவிலிருந்து பூர்த்தி செய்து கொள்கின்றன. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பலவீனமான தேவையால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்படலாம்” என்று ‘எஸ் அண்ட் பி’ கூறியுள்ளது.அதுமட்டுமன்றி, 2020 ஆம் ஆண்டில் ஆசிய - பசிபிக் பொருளாதார நாடுகளின்பொருளாதார வளர்ச்சியே 3 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்என்று மதிப்பிட்டுள்ளது.‘மூடிஸ்’ மதிப்பீட்டு நிறுவனமும் 2020-ஆம் ஆண்டிற்கான வளர்ச்சியை 5.3 சதவிகிதத்திலிருந்து 5.1 சதவிகிதமாக அண்மையில் குறைத்தது குறிப்பிடத்தக்கது.