பி.எட் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 20 முதல் இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன்(ஜூலை 09) முடிவடையும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி ஜூலை 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கொவி.செழியன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும்.
மாணவர்கள் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணையை www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.