சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொடர் கனமழை பெய்துள்ளது. இதனால் அண்டை நாடான நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடேகோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 9 பேரின் உடல்கள் தாதிங் மற்றும் சிட்வான் ஆகிய மாவட்டங்களில் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 6 சீனர்கள் உள்பட 20 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சீனா- நேபாளம் எல்லைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான மீட்புப் படையினர் குவிகப்பட்டு, அங்குள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.