ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 17-ஆம் தேதி நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானியப் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் கோலாம்ரெஸா சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இரு தலைவர்களுக்கும் தெஹ்ரானில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில், இன்று நடந்த தாக்குதலில், ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்மாயில் கதிப்பின் மரணத்தை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
