states

குஜராத்: கம்பிரா பாலம் இடிந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் அமைந்துள்ள காம்பிரா பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு லாரிகள், இரண்டு வேன்கள் மற்றும் ஒரு ஆட்டோ என மொத்தம் ஐந்து வாகனங்கள் மஹிசாகர் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
முறையான பராமரிப்பு இல்லாததே இந்தப் பால விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் நிவாரணம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
மேலும், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதி அறிவித்தார்.