பாட்னா:
பீகார் மாநிலம் சம்பரன் கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது இஸ்ரேல். சம்பவத்தன்று கனமழை கொட்டி,மின்சாரம் தடைப்பட்டதன் காரணமாக, மொபைலில் சார்ஜ் ஏற்றுவதற்கு நண்பரின்வீட்டுக்குச் சென்றுள்ளார்.அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல், ‘ஜெய்ஸ்ரீராம்’ கூறுமாறு சொல்லி,கொடூரமாகத் தாக்கியுள் ளது. நாக்கை அறுக்கவும் முயற்சித்துள்ளது. தலையில்பலத்த காயமடைந்து முகம் மது இஸ்ரேல் மயங்கி விழுந்தநிலையில், அவர் இறந்து விட்டதாக கூறி தப்பியுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மோஷி காவல் நிலைய போலீசார், பதனா கிராமத்தைச் சேர்ந்தகோபால், ராகுல் பன்வாரிலால், லாகான், வீர்-பிரின்ஸ்,அபிஷேக் மற்றும் நிதிஷ் சிங்ஆகியோர்தான் இஸ்ரேலைத் தாக்கியவர்கள் என் றும், இவர்கள் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்அடையாளம் கண்டறிந்துள் ளனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரும், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவருமான வீர்-பிரின்ஸ், தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். முஸ்லிம் இளைஞர் முகம் மது அவரது பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந் தார்; ஆனால் அவரை யார் அடித்து காயப்படுத்தியது என எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.