புதுதில்லி:
கொரோனா காரணமாக, நாட்டின் பொருளாதாரமே நிலைகுலைந்திருக்கும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானிஉலகின் 8-ஆவது பெரும்பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
2020 ஆண்டுக்கான உலக பெரும்பணக்காரர்கள் பட்டியலை, புளூம்பெர்க் நிறுவனம்(Bloomberg Billionaires Index 2020) தற்போது வெளியிட்டுள்ளது.இதில், ஜூலை 9 அன்றைய நிலவரப்படி, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ தலைவர் முகேஷ் அம்பானி 68.3 பில்லியன் டாலர்(சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி) சொத்து மதிப்புடன் 9-ஆவதுஇடத்திலிருந்து 8-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.‘ஆரக்கிள் ஆப் ஒமாகா’ (Oracle of Omaha) நிறுவனத்தின் தலைவர் வாரன் பப்பெட்டை (67.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு) அம்பானி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.ஏற்கெனவே, பேஸ்புக் இன்க் (Facebook Inc) மற்றும் சில்வர்லேக் (Silver Lake) உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து, அம்பானியின்டிஜிட்டல் யூனிட்டான, ஜியோ 15 பில்லியன் டாலருக்கும் அதிகமானமுதலீடுகளைப் பெற்றிருந்த நிலையில், இந்த வாரம், ரிலையன்ஸ்எரிபொருள் - சில்லரை வணிகத்திலும் பிபி பிஎல்சி (BP Plc) நிறுவனத்தின் 1 பில்லியன் டாலர் முதலீட்டை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்பெற்றது. இது அம்பானியின் சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளது.ஆனால், 2.9 பில்லியன் டாலர்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியதால், வாரன் பப்பெட் பெரும்பணக்காரர் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.